எமது  தூர நோக்கு

"வினைத்திறனாகவும்  உற்பத்தித்திறனாகவும் வேவைகளை  வழங்கும்  சிறந்த  அசர நிறுவனமாகுதல்"

எமது  பணி

"அரச கொள்கைகளுக்கு இணங்க சேவைகளை  வழங்குதல்,வழங்களை  ஒருங்கிணைத்தல் மற்றும் மக்கள் பங்களிப்பைக் கொண்ட வினைத்திறனான, நிலைப்பேரான மற்றும் திட்டமுள்ள அபிவிருத்தி செயல்முறையின்  மூலம் மக்கள்  வாழ்க்கையை உயர்த்துதல்"

பிரிவு தொட்பான விபரங்கள்

வரலாற்றுச் சிறப்பு மிக்க காலி  மாவட்டத்தைச் சேர்ந்த 19 செயலகப்பிரிவுகளில்  ஒன்றான எமது  பிரதேச செயலகம் மேல்  மாகாணத்திலிருந்து தென்  மாகாணத்திற்கு நுழைகையில் பிரதான  வாயிலாக  அமைந்துள்ளது.எமது பிரதேச செயலக அதிகார வலாகம் , கடலோர பகுதிக்கு சமாந்தரமான  வடக்கு முதல் தெற்கு  வரை சுமார் 9.5 கி.மீ. பரவுவதுடன் கடலோரத்திலிருந்து 12 கி.மீ. நாட்டின் உற்பகுதிக்கு பெந்தர பிருவு  பரவியுள்ளது.

மற்றும் பெந்தர  நதிக்கு  சமாந்தரமாக ஒரு பெரும்  பகுதி சுற்றலா மையத்தில் சேர்வதுடன் அங்கு பெருமளவிலான  சுற்றலா  விடுதிகள் மற்றும் ஹொட்டெல்கள்  அமைந்துள்ளன. பிரதேசத்தில்  இருக்கின்ற  உள்ளக  நீர்த் தேக்கங்கள் மற்றும் தீவுகளினால் பிரதேசத்திற்கு  எழிலும்  சுற்றுலாக்  கவர்ச்சியும் சேர்த்துள்ளன.தெத்தூவ  நீர்த்தேக்கம் சார்ந்த  பிரதேசத்தை ஒரு சுற்றுலாப் பிரதேதசமாக  அபிவிருத்தி செய்வதற்கு தற்பொதைய  அரசு  மிகுந்த  கவனத்தை செலுத்தியுள்ளது.

பெந்தொட்ட பிரதேச செயலகப் பிரிவின்  அமைப்பு,

வடக்கு அகலக்கோடு 60 - 200, 60 – 210  மற்றும்

கிழக்கு  நெடுங்கோடு 800 - 00, 800 – 90 க்கு  இடையில்  அமைந்துள்ளது.

பெந்தொட்ட பிரதேச செயலகப்  பிரிவின் எல்லைகள்  பின்வருமாறே.

வடக்கில் மற்றும் வடகிழக்கில் களுத்தறை  மாவட்ட  எல்லையும் ,

கிழக்கில் எல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவும் ( எல்பிட்டி  ஓடை)

தெற்கில் கரந்தெனிய  மற்றும் பலபிட்டி பிரதேச செயலாளர்  பிரிவும்

மேற்கில் இந்து  சமுத்திரமும்  ஆகும்.

பெந்தொட்ட  பிரதேச செயலாளர் பிரிவின் வரலாறு

மக்கள் மரபுகளுக்கமைய பெந்தொட்ட எனும் பெயர்  அப்போது பெந்தர  நதிக்கரயை சொந்தமாக்கிக் கொண்ட  “பெம்” எனும் பேயினால் உருவானதென்று கூறப்படுகின்றது. முற்  காலத்தில் இப் பேயினால்  பிரசித்தியான  பெம்தொட்ட  பின்னர் பெந்தொட்ட  ஆனதென்று நம்பப்படுகின்றது.  அது போலவே பழங்காலத்தில் எமது  நாட்டை  ஆண்ட ஓலந்தர், பெந்தொட்ட  கடலோரம்  ஊடாக  இலங்கைக்குள்  உற்பிரவேசிக்கும் கப்பல்  துறைமுகமாகவும் பயன்படுத்தியுள்ளனர்

பெந்தொட்ட பிரதேசம் வரலாற்று ரீதியாக முக்கியமாகும் போதி அருகிய இரஜமஹா விஹாரை,வனவாச இரஜமஹா விஹாரை, கனே புராண இரஜமஹா விஹாரை,போதிமளு இரஜமஹா விஹாரை மற்றும் கலபாத்த இரஜமஹா விஹாரை என்ற  ஐந்து விஹாரைகள் பிரிவிற்குள்  அமைந்துள்ளதுடன்  இவ் விஹாரைகளை  இணைத்தவாறு செல்லக்கூடிய சுரங்க  வீதியொன்றும் அக்காலத்தில்  அமைந்துள்ளதென்பதற்கு தொல்லியல்  காரணிகள் கிடைத்துள்ளன. துட்டுகெமுணு  மன்னனின்  சகோதரன்  சத்தாதிஸ்ஸ குமாரனால் போர்  படைகளை சேர்க்கையில்  இப் பிரதேசத்தில்  தங்கியுள்ளதென்றும் அவ்வாறு படைவீரர்கள் இருந்த  இடமாக கயிகாவல பிரதேசத்தை பயன்படுத்தியதாகவும்  கூறப்படுகின்றது.

பெந்தொட்ட  பிரதேச செயலாளர் பிரிவின் அமைவு

கொழும்பு திசையில்  இருந்து வரும் போது , அளுத்கம  நகரத்தில்  இருந்து 3 கி.மீ.    தொலைவிலும் காலி திசையில்  இருந்து  வரும் போது 69 கி.மீ. தூரத்திலும் காலி வீதிக்கு முகம்தந்து ,பெந்தொட்ட  பிரதேச  சபைக்கு அருகாமையில் எமது  அமைந்துள்ளது.

mapeng

பெந்தொட்ட பிரதேச செயலகத்தால் பொது மக்களுக்காக வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு மனித மற்றும் பௌதீக வழங்கள்  வசதிகளை அளித்துள்ளன. பயனாளர்களுக்காக  திருப்திகரமான  மற்றும் வினைத்திறனான அரச சேவையை  வழங்குவதற்கு ஒழுங்குபடுதப்பட்ட நிறுவன  கட்டமைப்புடன் பயனுள்ளதாக நிறுவனத்திற்கு  உரித்தான மனித  வழங்களை வழுநடத்துதல்  செய்யப்படுகின்றது.  ஒரு  நாளுக்கு 150-175 இடையிலான  அளவு பயனாளர்கள்  தங்களது  சேவைகளை பெறுவதன் நோக்கத்துடன்  எமது  அலுவலகத்தை நோக்கி  வருகைத் தருகிறார்கள்.

1960 வருடத்தின்  முதல் 2010ஆம் ஆண்டு வரை   இலங்கைக்குள் அனைத்து பிறப்பு,இறப்பு மற்றும்  விவாக  சான்றிதழ்களை வழங்கும்  வசதிகள்  பதிவாளர் பிரிவுக்கு உரித்தானது. அதுபோலவே 2015 ஆண்டு வரை கொழும்பு, கம்பஹ மற்றும்  குருணாகல் மாவட்டங்களுக்கு  ஏற்புடைய பிறப்பு,இறப்பு மற்றும்  விவாக  சான்றிதழ்களை வழங்கும்  இயலுமை உண்டு.மேலும் தென் மாகாணத்திற்குள் வாகன வருமான  அனுமதிச் சீட்டுக்களை  வழங்கும்  வசதிகளும் எமக்கு  உரித்தானது.

பெந்தொட்ட பிரிவிற்கு பொறுப்பாக இருகின்ற  நிர்வாக உத்தியோகத்தர்கள்

 இல பெயர் பணி புரிந்த ஆண்டு
  பிராந்திய வருமான  உத்தியோகத்தர்கள்
 01 திரு. டீ.எஸ். கரன்னாகொட  1962
 02 திரு. எம்.ஜீ. சந்திரரத்ன  1967
 03 திரு.வயி.டப். குணவர்தன  1968
 04 திரு. கே. டப். லிவேரா  1970
உதவி அரசாங்க அதிபர்/ பிராந்திய உப மாவட்ட செயலாளர்கள்
 05 திரு.என்.ஏ. ஓபடகே  1972
 06 திரு. ஈ.ஈ. ஜினதாச  1973
 07 திரு. எஸ்.ஜீ. உடமத்த  1974
 08 திரு. எம்.ஜீ.எஸ். தம்மசேன  1975
 09 திரு. டீ.சோமஜீவ  1983
பிரதேச  செயலாளர்கள்/மேலதிக மாவட்ட செயலாளர்கள்
 10 திரு. டீ. சோமஜீவ  1990
 11 திரு. டீ.ஏ. குணதாச  1992.08
 12 திரு. டப்.வீரகோன்  ( பதில் கடமை)  2000.08
 13 திரு. யூ.டீ.சீ. ஜயலால்  2000.12
 14 திரு.கேகே. குணபால  2006.02
 15 திரு. யூ.ஜீ. விதுர  காரியவசம்  2012.10
 16 திரு. டப்.டப்.கே. விதானகே  2020.10.02
 17 திரு. பந்துல  அபேசேகர ( தற்போதைய)  2020.12.10 - 2025.09.11
 18 திரு.டபிள்யூ.ஏ.ஜனஹிதா  2025.10.03 முதல்

News & Events

01
ஜூன்2026
The Sil observance program organized to mark Vesak Poya

The Sil observance program organized to mark Vesak Poya

In commemoration of the sacred Vesak Poya...

10
பிப்2024
புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டார்.

புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டார்.

பெந்தோட்டை பிரதேச செயலகத்தில் ஒன்பதாவது பிரதேச செயலாளராக திரு....

குடியுரிமை சாசனம்

Scroll To Top